ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
இனி கலவரம் தான்... புதிய சீரியலில் களமிரங்கும் பாரதி கண்ணம்மா பரீனா! அதுவும் எந்த சீரியலில் தெரியுமா?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நாளுக்கு நாள் பல சுவாரஷ்யங்களுடன், அதிரடி திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் பாரதி கதாபாத்திரத்தில் அருண் நடிக்கிறார்.
டாக்டர் பாரதியை ஒருதலையாக காதலித்து அவரை அடைய பல வில்லத்தனங்களை செய்யும் கொடூர வில்லியான வெண்பாவாக நடித்து வருபவர் பரீனா. இவரின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகை ஃபரீனா ரஹ்மான் உபைத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் அவர் கர்ப்பமாக இருந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் சிறிது இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிகை பரினா நடித்து வருகிறார்
தற்போது நடிகை பரீனா வேறொரு சீரியலிலும் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் அபி டெய்லர் என்ற தொடரில் புதிய வேடத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என்று இது குறித்த ஒரு புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்...