மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி பரீனாவின் மகனா இது.....! வைரலாகும் லேட்டஸ் புகைப்படம் இதோ...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் பாரதி கண்ணம்மா. நாளுக்கு நாள் சுவாரஸ்யமாக, விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் இந்த தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இத்தொடரில் கொடூர வில்லியாக, வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரள வைத்து வருபவர் பரீனா. நடிகை ஃபரீனா கடந்த 2017ஆம் ஆண்டு ரஹ்மான் உபைத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தற்போது ஒரு அழகிய மகன் உள்ளார். மகன் பிறந்தும் சீரியலில் இடைவெளி விடாமல் தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், தனது மகன் கணவருடன் வெளியே செல்லும் போது எடுத்த லேட்டஸ்ட் கியூட் புகைப்படம் ஒன்று இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.