#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
2 முறை அபார்ஷன்.! 42 வயதில் கர்ப்பம்.! எமோஷனலாகி பிரபல சீரியல் நடிகை ஜுலி அட்வைஸ்!!
தமிழில் பல தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து பிரபலமாக இருந்தவர் நடிகை ஜூலி. இவர் பல பிரபல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தற்போது 42 வயதில் கர்ப்பமாக இருக்கும் அவர் அண்மையில் தனது கணவருடன் பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது, நான் இப்போது நிறை மாத கர்ப்பமாக உள்ளேன். எங்கள் இருவருக்குமே இந்த குழந்தை மிகவும் ஸ்பெஷல். நான் முதல்முறையாக கர்ப்பமானேன். அது அபார்ட் ஆகிவிட்டது. இரண்டாவது முறை கர்ப்பமான போது கர்ப்பப்பை குழாயில் கரு உருவானதால் மருத்துவர்களே அதனை அபார்ட் செய்ய கூறிவிட்டனர். தற்போது மூன்றாவது முறையாக கர்ப்பமாகியுள்ளேன். இதற்கு மிகவும் பயந்தோம்.
ரிசல்ட் பாசிட்டிவ் என வந்தவுடன் ஹாஸ்பிடலில் அழுதே விட்டோம். ரொம்ப வயசாயிருச்சு இனி எப்படி குழந்தை பிறக்கும் என பலரும் கேட்டார்கள். சிகிச்சையின் மூலமாகதான் தற்போது குழந்தை பிறக்கவுள்ளது. எனது கணவரும் குடும்பமும் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தனர். குழந்தை கன்ஃபார்மாகி ஐந்து மாதம் வரை யாரிடமும் கூறவில்லை.
நான் எல்லோருக்கும் கூறும் ஒரே அட்வைஸ், சீக்கிரமா கல்யாணம் செய்தாலும் உடனே குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள். குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளி போடாதீர்கள் என கூறியுள்ளார்.