மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மேனியில் மினுக்கும் தேவதை... திருமண கோலத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை! வைரலாகும் அழகிய புகைப்படங்கள்...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது. அவ்வாறு நாளுக்கு நாள் அதிரடித் திருப்பங்களுடன், மிகவும் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இத்தொடர் டிஆர்பியிலும் முன்னணியில் வந்து பெருமை சேர்த்தது.
மேலும் இத்தொடரில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்து வருபவர் கண்மணி மனோகரன். ஆரம்பத்தில் இத்தொடரில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவர் தற்போது மிகவும் நல்லவராக அசத்தலாக நடித்து வருகிறார்.
மேலும் இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் குயின் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக களமிறங்கியுள்ளார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், பாரம்பரிய உடையான பட்டு புடவையில் திருமண கோலத்தில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்....