திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பிரபல சீரியல் நடிகைக்கு அழகிய பெண் குழந்தை; வாழ்த்து மழையில் நனையும் சின்னத்திரை தம்பதி.!
பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ-யில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி, வள்ளி திருமணம் ஆகிய தொடர்களில் நடித்து தமிழக மக்களின் பேராதரவை பெற்ற நடிகை நக்ஷத்ரா விஸ்வநாதன்.
இவர் விசுவநாதன் என்பவரை கடந்த ஜூலை 12ல் திருமணம் செய்துகொண்டார். தம்பதிகள் இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு மணந்ததால், மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர்.
ஏற்கனவே நக்ஸத்ரா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி, பின்னர் அது உறுதிப்படுத்தப்படாமல் போனது. பின், நக்ஸத்ரா தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்ததைத்தொடர்ந்து அவருக்கு வாழ்த்துக்கள் வந்தன.
இந்நிலையில், நடிகை நக்ஸத்திரா - விஸ்வநாதன் தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் அவர்கள் வாழ்த்து மழையில் நனைந்து வருகின்றனர்.