திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
செம்பருத்தி சீரியலில் செம கெத்தாக என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை....! அட.. யார்னு பார்த்தீர்களா...
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று, செம்ம ஹிட்டாகி டிஆர்பியில் முன்னணியில் வந்து ஒளிபரப்பாகி வரும் தொடர் செம்பருத்தி. இத்தொடருக்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இத்தொடரில் துவக்கத்தில் ஆதி கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ் மற்றும் பார்வதியாக ஷபானா நடித்து வந்தனர். இந்நிலையில் ஒரு சில காரணங்களால் கார்த்திக் ராஜ் அந்த தொடரிலிருந்து விலகிய நிலையில் தற்போது அகினி என்பவர் ஆதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த சீரியலில் நடித்து வரும் நடிகை ஷபானா செம்பருத்தி சீரியல் மூலம் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் இத்தொடரில் தற்போது சீரியல் நடிகை நிஷா கணேஷ் வழக்கறிஞராக களமிறங்கியுள்ளார்.
நடிகர் கணேஷ் வெங்கட்ராமை திருமணம் செய்துகொண்ட பிறகு குடும்ப வாழ்க்கையில் பிஸியாக இருந்த நடிகை நிஷா தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.