பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
அட பாத்துமா.. கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் பகல்நிலவு நடிகை போட்ட செம ஆட்டம்! அதுவும் எந்த பாட்டுக்கு பார்த்தீங்களா!!
விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைகளுடன் ஒளிபரப்பாகி ஏராளமான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவ்வாறு ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த தொடர்களில் ஒன்றுதான் பகல் நிலவு.
இத்தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பரிச்சயமானவர்கள் அன்வர் மற்றும் சமீரா ஷெரிப். அவர்கள் இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையிலேயே சமீபத்தில் சமீரா தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை கூறியிருந்தார்.
சமூகவலைதளங்களில் பிசியாக இருக்கும் சமீரா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். இந்த நிலையில் கர்ப்பமாக இருக்கும் அவர் தற்போது இணையத்தில் பெருமளவில் ட்ரெண்டாகி வரும் என்ஜாய் என்ஜாமி பாடலுக்கு செம ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.