என்னது? அழகு சீரியல் சுதாவுக்கு இத்தனை வயசா? நம்ப முடியலையே!



Serial actress shruthi raj current age

சன் டீவியில் ஒளிபரப்பான தென்றல் என்ற மெகாத்தொடர் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகை ஸ்ருதி ராஜ். தற்போது அழகு சீரியலில் சுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 1979, பிப்ரவரி 25 அன்று கேரளாவில் பிறந்த இவர் ஒரு மலையாள திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அதன்பின்னர் தளபதி விஜய் நடித்த மாண்பு மிகு மாணவன் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் ஒருசில படங்களில் கதாநாயகியாவும் நடித்துள்ள இவர் வெள்ளித்திரையில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பிரபலமாகவில்லை.

Shruthi raj

இந்நிலையில்தான் தேவயானி நடித்த கோலங்கள் தொடரில் நடிக்க ஸ்ருதி ராஜுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதில் தனது நடிப்பு திறமை மூலம் நல்ல வரவேற்பை பெற்ற இவர் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என அணைத்து முன்னணி தொலைக்காட்சிகளிலும் முக்கிய சீரியல்களில் நடித்தார்.

அன்று பார்த்ததுபோல் இன்றும் இளமை தோற்றத்துடன் இருக்கும் அழகு சுதாவுக்கு தற்போது 40 வயது ஆகிறதாம். 40 வயதான நிலையிலும் இவர் தற்போதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. விரைவில் தனது திருமணம் குறித்து அறிவிப்பதாக கூறியுள்ளார் ஸ்ருதி ராஜ்.

Shruthi raj