#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சொகுசு வாழ்க்கைக்கு ஆசை! கணவர் வீட்டிலேயே கொள்ளையடித்த தெய்வமகள் சீரியல் நடிகை! வலைவீசும் போலீசார்கள்!
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். சினிமா ஆசையில் சென்னைக்கு சென்ற இவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் கார் ஒட்டுனராக இருந்துள்ளார். மேலும் அவர் சீரியல் நடிகைகளுக்கும் காரை ஓட்டியுள்ளார். இந்நிலையில் மணிகண்டனுக்கு தெய்வமகள் சீரியலில் நடித்திருந்த நடிகை சுசித்ராவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு எதுவும் இல்லாததால், கார் ஓடாததால் வருமானம் இன்றி இருவரும் தவித்து வந்துள்ளனர். அதனை தொடர்ந்து இருவரும் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் வீட்டில் பீரோவில் பணம் மற்றும் நகைகள் இருப்பதைக் கண்டுள்ளனர். இந்நிலையில் அந்த நகைகளை கொள்ளையடித்து சென்னைக்கு சென்று விடலாம். அங்கு குறும்படம் எடுத்து யூடியூப்பில் சம்பாதிக்கலாம் என நடிகை சுசித்ரா திட்டம் போட்டு கொடுத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு பிறகு, வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மணிகண்டன் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துவிட்டு சென்னைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு திரும்பிய மணிகண்டனின் தந்தை பீரோவில் இருந்த 18 பவுன் நகைகள், 50 ஆயிரம் பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு மணிகண்டன்தான் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்தார் என்பதை கண்டறிந்து அவரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து விவரமறிந்த நடிகை சுசித்ரா தலைமறைவாகி விட்டதாகவும் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.