நந்தினி சீரியல் நடிகைக்கு பாலியல் தொல்லை!. இந்த ரெண்டுபேரையும் சீரியலில் இருந்து தூக்கவேண்டும்! நடிகை கதறல்!



sexual complaint in nanthini serial


பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நந்தினி சீரியல், தமிழகத்திலே அனைவரையும் கவர்ந்த சீரியல் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த சீரியலுக்கு குழந்தை முதல் முதியவர் வரை ரசிகர்கள் உள்ளனர். ஐ டி ஊழியர்கள் கூட இந்த சீரியலுக்கு அடிமையாய் உள்ளனர்.

இந்த நிலையில் நந்தினி தொடரில் தான் நடிக்கும்போது நடிகர் சண்முகராஜன் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்தாக காவல்துறையில் புகார் கொடுத்துவிட்டு அதைத் திரும்பப் பெற்றிருக்கிறார் நடிகை "ஓ போடு" ராணி.

nanthini serial

அவர் கூறுகையில் தொடரில் நடிக்கும்போது சண்முகராஜன் என்னிடம் தாக்காதவாறு நடந்துகொள்வது எனக்கு அருவருப்பைக் கொடுக்கும்.

இந்த மாதிரியெல்லாம் என்கிட்ட நடந்துக்கிற வேலையெல்லாம் வெச்சுக்காதீங்கனு கண்டிச்சிருக்கேன். அனால் அவர் திருந்தவே இல்லை.

சண்முகராஜனின் இந்தச் செயலால் என் கணவர் ரொம்ப வருத்தப்பட்டார். இதனால் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம்.

சண்முகராஜா மட்டுமல்ல, அந்த சீரியலின் இயக்குநர் ராஜ்கபூர் மீதும் புகார் கொடுத்திருந்தேன். இவர் தொடரில் நடிக்கும் பெண்களைக் கேவலமா நடத்துவார். கொச்சையான வார்த்தைகளால் திட்டுவார்.

நந்தினி தொடர் யூனிட்டில் இவங்க ரெண்டும் பேரும் வக்கிர புத்தி கொண்டவங்க. இவங்க ரெண்டு பேரும் சீரியலிலிருந்து விலகணும் என கூறியுள்ளார்.

nanthini serial

நந்தினி தொடரை நம்பி பல குடும்பங்களுக்கு உள்ளது. நான் கொடுத்த புகார் காரணமாக அந்த தொடரில் வேலை பார்க்கும் யாருக்கும் எந்தவொரு பிரச்னையும் வரக்கூடாது.

இதைப் பற்றி குஷ்பு அக்காவே என்கிட்ட எடுத்துச் சொன்னாங்க. அதுமட்டுமல்லாம நடிகர் சங்கத்தில் இதுபற்றிப் புகார் கொடுக்கப் போவதாகவும் சொன்னாங்க. அதனால்தான் புகாரை வாபஸ் வாங்கினேன் என ராணி கூறியுள்ளார்.