திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடிகையை காதலித்து திருமணம் வரை சென்ற விஜயகாந்தின் காதல்.. பிரித்து வைத்த நண்பர்.. வெளியான தகவல்.!
"இனிக்கும் இளமை" திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி கருப்பு எம்.ஜி.ஆராக ஜொலித்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் தனது திரைத்துறை பயணத்தை தொடங்கிய சமயங்களில், மூன்று எழுத்து நடிகையுடன் இணைந்து நடித்த திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.
இவர்களின் நட்பு ரீதியான பழக்கம் காதலாக மாறி திருமணம் வரை சென்றது. ஆனால் அது பின்னாளில் நடக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து சினிமா பத்திரிகையாளர் செய்யார் பாலா பேசுகையில், "விஜயகாந்த் குறித்து பல கிசுகிசுக்கள் இருக்கின்றன.
அவற்றை விஜயகாந்த் பெரும்பாலும் கண்டுகொள்வது இல்லை. விஜயகாந்த் மற்றும் அவர் காதலித்த மூன்று எழுத்து நடிகையை பிரித்தது ராவுத்தர் தான். அவர் வேண்டாம் என்று கூறியதால் இருவரின் காதலும் முடித்து வைக்கப்பட்டது. இருவரும் காதலித்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
சினிமாவில் இருப்பதால் வேண்டாம் என நினைத்திருக்கலாம். ராவுத்தருக்கு விஜயகாந்தை முதலமைச்சராக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதற்காக விஜயகாந்தை அவர் வடிவமைத்தார். அந்த சமயத்தில் நடிகையுடன் திருமணம் நடைபெற்றால் அதற்கு தடைகள் ஏற்படும் என எண்ணி வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
இந்த விஷயம் நடிகைக்கு தெரிந்து மன உளைச்சலை ஏற்படுத்தியது. பிரேமலதா வந்ததும் ராவுத்தரையே வெளியே அனுப்பினார்" என்று கூறினார்.