திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திருமணமாகி ஒரு மாசம்தானே ஆகுது.. ஷபானா- ஆர்யன் ஜோடிக்கு என்னதான் ஆச்சு!! பரவி வரும் ஷாக் தகவல்!!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடரில் பார்வதி கதாபாத்திரத்தில், ஹீரோயினாக நடித்து பெருமளவில் பிரபலமானவர் ஷபானா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆர்யனை காதலித்து வந்த நிலையில், இருவரும் கடந்த நவம்பர் 11ம் தேதி மிகவும் எளிமையாக திருமணம் செய்து கொண்டனர்.
மேலும் இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காத நிலையில் அவசரஅவசரமாக திருமணம் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் தற்போது திருமணமாகி ஒரு மாதமே ஆனநிலையில் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் இந்த திருமணத்தை ஆர்யன் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை, இதுவரை ஷபானா அவர்களது வீட்டிற்கே செல்லவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் ஷபானா மற்றும் ஆர்யன் இருவரும் தேனிலவுக்காக புதுச்சேரி சென்ற நிலையில் மறுநாளே திரும்பிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஷபானா தன் இன்ஸ்டாகிராமில், நாம் எல்லோருமே சில வலிகளை அனுபவித்துதான் வந்திருப்போம். பலருக்கு பலவிதமான பிரச்னை இருக்கு. சிலர் பிரியமான ஒருத்தரை இழந்திருக்கலாம் என பலவற்றை குறிப்பிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் இந்த பதிவிற்கு என்ன காரணம்? ஏதேனும் பிரச்சினையா? என அதிர்ச்சியுடன் கேள்வியெழுப்பி வருகின்றனர்.