திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"லவ் யூ நண்பா" - விஜய் சேதுபதிக்கு மனதார நன்றி கூறிய ஷாருக்கான்; காரணம் தெரிஞ்சிக்கோங்க.!
ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ஜவான். அட்லீ இயக்கத்தில், அனிரூத் இசையில் அட்டகாசமான ஆக்சன் திரில்லர் படமாக ஜவான் உருவாகியுள்ளது. படத்தின் முன்னோட்டம் நேற்று வெளியிடப்பட்டது.
இந்நிலையில், விஜய் சேதுபதிக்கு பதில் தெரிவித்துள்ள நடிகர் ஷாருக்கான், "உங்களுடன் பணிபுரிந்ததை நான் பெருமையாக கருதுகிறேன். எனக்கு படப்பிடிப்பு தளத்தில் தமிழ் சொல்லிக்கொடுத்ததற்கு நன்றி.
Sir an honour to work with you. Thanks for teaching me a bit of Tamil on the sets & the delicious food u got. Love u Nanba! https://t.co/b346h1zjrt
— Shah Rukh Khan (@iamsrk) July 11, 2023
தமிழ்நாட்டு உணவை எனக்கு வழங்கியதற்கும் நன்றி. லவ் யூ நண்பா" என கூறியுள்ளார். இந்த பதிவுகள் வைரலாகி வருகின்றன. ஜவான் திரைப்படம் செப்டம்பர் மாதம் 7ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. படத்தின் முன்னோட்டமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி ட்ரெண்டிங்கில் இருக்கிறது.