திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இந்தியன் 2 படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய ஷங்கர்.. வைரல் புகைப்படங்கள்.!
இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக இருப்பவர் ஷங்கர். இவர் 30 வருடங்களாக சினிமாவில் இருந்தாலும் இதுவரை 12 திரைப்படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். இவருடைய ஒவ்வொரு திரைப்படங்களும் இந்திய அளவில் பேசப்படும் அளவிற்கு தரமாக இருக்கும்.
இந்த நிலையில் தற்போது இவர் உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் பாபி சிம்ஹா, சித்தார்த், காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இயக்குனர் சங்கர் இன்று தனது 60வது பிறந்தநாளை இந்தியன் 2 படக் குழுவினருடன் கொண்டாடியுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.