மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. ஒரே படத்துக்கு இவ்வளவு சம்பளமா?.. ஷங்கர் மகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?.!!
இயக்குனர் முத்தையா இயக்கத்தில், நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியாகவுள்ள "விருமன்" படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாக இருப்பவர் அதிதி சங்கர். இவர் இயக்குனர் சங்கரின் மகளாவார்.
சூர்யா தயாரித்துள்ள இந்த திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படம் வெளிவரும் முன்பே அதிதி சங்கர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி "மாவீரன்" படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது.
இந்நிலையில் இப்படத்திற்காக நடிகை அதிதிக்கு ரூ.25 லட்சம் சம்பளம் தரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதிதியின் நடிப்பில் இதுவரை ஒரு படம் கூட வெளிவராத நிலையில், அறிமுக நடிகைக்கு ரூ.25 லட்சம் சம்பளமாக தரப்பட்டுள்ளது எப்படி? என்ற கேள்வி கோலிவுட்டில் எழுப்பப்பட்டுள்ளது.