#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தளபதி விஜய் ஸ்டைலில் நடிகர் ஷாருக்கான் செய்த காரியம்! இணையத்தை கலக்கும் சூப்பர் புகைப்படம்!!
பாலிவுட் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிக்கட்டி பறப்பவர் ஷாருக்கான். இவருக்கென கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் நேற்று நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடியுள்ளனர்.
மேலும் பல திரையுலகப் பிரபலங்களும் ரம்ஜான் பண்டிகையை குடும்பத்தினருடன் உற்சாகமாக கொண்டாடினர். ரசிகர்களுக்கும் ரம்ஜான் பண்டிகை வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர். இந்த நிலையில் நேற்று ஷாருக்கான் ரம்ஜான் பண்டிகையை தனது வீட்டில் தடபுடலாக கொண்டாடியுள்ளார். அப்பொழுது அவரைக் காண வீட்டின் முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.
அவர்களைக் கண்டு பெரு மகிழ்ச்சியடைந்த ஷாருக்கான் வீட்டில் இருந்தவாறே கையசைத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் தனது வீட்டின் முன்பு கூடியிருந்த ரசிகர்களுடன் நடிகர் ஷாருக்கான் செல்பியும் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை அவர் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு நடிகர் விஜய் இவ்வாறு ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் பெருமளவில் வைரலானது.
How lovely to meet you all on Eid…. May Allah bless you with love happiness and may the best of your past be the worst of your future. Eid Mubarak!! pic.twitter.com/zsxyB783gR
— Shah Rukh Khan (@iamsrk) May 3, 2022