திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சிறையில் இருக்கும் நடிகர் ஷாருக்கானின் மகனை விடுவிக்க இத்தனை கோடி பேரமா?? வெளிவந்த ஷாக் தகவல்!!
சமீபத்தில் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் திடீர் சோதனை மேற்கொண்டதில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உட்பட சிலர் போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து ஆர்யன் கான் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை ஜாமீனில் எடுப்பதற்கு ஷாருக்கான் பலமுறை முயற்சி செய்தும், அது தோல்வியில் முடிந்தது. மேலும் இந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இதில் கோசாவி என்பவரும் அவரது உதவியாளர் பிரபாகர் செயின் என்பவரும் தனிப்பட்ட சாட்சியமாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பிரபாகரன் செயின் பேட்டி அளிக்கையில், ஆர்யன் கானை சிறையிலிருந்து விடுவிக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், நடிகர் ஷாருக்கானிடமிருந்து 25 கோடி ரூபாய் பேரம் பேசியதாகவும் அதேபோல், தன்னிடம் ஏராளமான வெற்று காகிதங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.