திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"நான் அந்த விஷயத்தை இழக்க காரணம் தமிழ்நாடு தான்" ஷாருக்கான் அதிரவைக்கும் பேச்சு.!
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்திருக்கும் படம் "ஜவான்". இவருடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். செப்டம்பர் 7ம் தேதி ஜவான் திரைப்படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் "ஹய்யோடா" பாடல் வெளியாகி ட்ரெண்டானது.
இந்நிலையில், நேற்று சென்னையில் ஜவான் படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஷாருக்கான், அட்லீ, விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்துகொண்டனர். படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது.
இவ்விழாவில் பேசிய ஷாருக்கான், "தமிழ் திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். கமல் சாருடன் 'ஹே ராம்' படத்தில் நடித்துள்ளேன். ரஜினி சாருடன் 'ரா ஒன்' படத்தில் நடித்துள்ளேன். எனக்கு இங்கு நிறைய நண்பர்கள் உள்ளனர்.
படப்பிடிப்பின் போது மாஸ்டர் ஷோபியிடம், உங்கள் தளபதியை போல் எனக்கு டான்ஸ் ஆட வராது. அதனால் எனக்கு ஈஸியான ஸ்டெப்ஸை கொடுங்கள் என்று கூறினேன். தமிழ்நாட்டு உணவு நன்றாக உள்ளது. இதனால் தான் எனது சிக்ஸ் பேக் காணாமல் போய்விட்டது" இவ்வாறு ஷாருக்கான் விழாவில் பேசினார்.