மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்பா.. கன்னமெல்லாம் மின்னுதே! இறுக்க கட்டி செம கிளாமராக ஷெரின் வெளியிட்ட வீடியோ! கிறுகிறங்கிய இளசுகள்!!
தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தவர் நடிகை ஷெரின். முதல் படத்திலேயே இவரது கிளுகிளுப்பான நடிப்பு ரசிகர்களை கிறங்கடித்தது. அதனைத் தொடர்ந்து நடிகை ஷெரின் ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், உற்சாகம் என சில படங்களில் நடித்துள்ளார்.
விசில் படத்தின் மூலம் இவர் மக்களிடையே பெருமளவில் பிரபலமானார். ஆனால் பின்னர் அவருக்கு சரியான படவாய்ப்புகள் எதுவும் வாராத நிலையில் அவர் ஒற்றைப் பாடலுக்கு நடனமாடினார். பின்னர் ஷெரின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிரபலமான பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்துகொண்டு மீண்டும் பிரபலமாக வலம் வந்தார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் போது உடல் எடை நன்கு அதிகரித்திருந்த ஷெரின், வெளியேறும்போது எடை குறைந்து செம ஸ்லிம்மாக மாறிவிட்டார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் அவர் அவ்வப்போது போட்டோஷூட், யோகா செய்யும் புகைப்படங்கள் போன்றவற்றை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது முகம் மினுமினுக்க, கிளாமராக துணியை கட்டிக் கொண்டு போஸ் கொடுத்து எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.