மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிகினி போட்டோஸ் வேணுமா?? ரசிகரின் ஆசைக்காக ஷெரின் வெளியிட்ட வீடியோ! இதுல அந்த விபரீத ஆசை வேற..!
தமிழில் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை ஷெரின். முதல் படத்திலேயே இவர் ரசிகர்களை நன்கு கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து நடிகை ஷெரின் ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், உற்சாகம் என சில படங்களில் நடித்துள்ளார். பின்னர் அவருக்கு சரியான படவாய்ப்புகள் எதுவும் வாராத நிலையில் ஒற்றைப் பாடலுக்கு நடனமாடினார்.
அதனைத் தொடர்ந்து ஷெரின் விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்துகொண்டு மக்கள் மத்தியில் மீண்டும் பிரபலமாக வலம் வரத் துவங்கியுள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் போது உடல் எடை நன்கு அதிகரித்திருந்த ஷெரின், வெளியேறும்போது எடை குறைந்து செம ஸ்லிம்மாக மாறிவிட்டார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் அவர் அவ்வப்போது போட்டோஷூட், யோகா செய்யும் புகைப்படங்கள் மற்றும் சில தனது வீடியோக்களை பகிர்வார். இந்த நிலையில் அண்மையில் நடிகை ஷெரினிடம் ரசிகர் ஒருவர் பிகினி புகைப்படத்தை கேட்டு கமெண்ட் செய்துள்ளார்.
இந்த நிலையில் ஷெரின் பிகினி புகைப்படம் போட்ட டீ சர்ட் அணிந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த டி-ஷர்ட் அணிந்து இருந்த மற்றொரு வீடியோவில் அந்த உடையை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். அதனைக் கண்ட நெட்டிசன்கள் ஏன் இந்த விபரீத ஆசை? என கேட்டு வருகின்றனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.