மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எங்கேயிருந்து வந்துச்சுன்னே தெரியல.. பாதிப்புக்குள்ளான நடிகை ஷெரின் வெளியிட்ட ஷாக் வீடியோ! பதறிய ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற துள்ளுவதோ இளமை படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஷெரின். அதனை தொடர்ந்து அவர் ஸ்டூடன்ட் நம்பர் 1, விசில், உற்சாகம், பீமா என பல படங்களில் நடித்திருந்தார். நடிகை ஷெரின் தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம்,தெலுங்கு என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
பின்னர் வாய்ப்புகள் குறைந்த நிலையில் ஷெரின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் கூட்டமே உருவானது. அதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பிஸியாக இருந்த அவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
இந்த நிலையில் தற்போது இரு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டும் நடிகை ஷெரினுக்கு கொரோனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் அனைவரும் தைரியமாக இருங்கள். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவுசெய்து பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.