மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பொண்ணு ரெடி! கல்யாணகோலத்தில் இளசுகளை சொக்கவைத்த ஷெரின்! மயங்கவைக்கும் புகைப்படங்கள் இதோ!!
தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற துள்ளுவதோ இளமை படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஷெரின். அதனை தொடர்ந்து அவர் ஸ்டூடன்ட் நம்பர் 1, விசில், உற்சாகம், பீமா என பல படங்களில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார். மேலும் நடிகை ஷெரின் தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம்,தெலுங்கு என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
பின்னர் பட வாய்ப்புகள் எதுவும் பெருமளவில் வராமல் இருந்த ஷெரின் பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார். மேலும் சிறப்பாக விளையாடி நிகழ்ச்சியின் இறுதிவரை சென்றார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உருவானது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த துவக்கத்தில் மிகவும் குண்டாக இருந்த நடிகை ஷெரின் பின்னர் உடல் எடையை குறைத்து தற்போது செம ஸ்லிம்மாக மாறிவிட்டார். மேலும் வித்தியாசமான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது புதுமணப்பெண் போல உடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் பொண்ணு ரெடி! மாப்பிள்ளை எங்கே என கேள்வி எழுப்பியுள்ளார்?? அந்த புகைப்படம் தீயாய் பரவி வருகிறது.