மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா..! 100 நாளைக்கு 1 கோடி சம்பளம்..! பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் ஷில்பா மஞ்சுநாத்..?
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சில் கலந்துகொள்ள பிரபல நடிகை ஒருவர் ஒரு கோடி கேட்டதாகவும், தற்போது விஜய் தொலைக்காட்சி நிறுவனம் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகிவருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற தொடர்களில் ஒன்று பிக் பாஸ். மூன்று சீசன்கள் முடிந்துவிட்ட நிலையில் நான்காவது சீசன் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது பிக்பாஸ் சீசன் 4 விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக விஜய் தொலைக்காட்சி அண்மையில் அறிவித்தது.
இதனையடுத்து இந்த முறை போட்டியாளர்களாக யார் யார் பங்கேற்கப்போகிறார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில், சூர்யா தேவி, டிக் டாக் பிரபலம் இலக்கியா, நடிகை ரம்யா பாண்டியன், கு வித் கோமாளி புகழ், வித்யுலேகா ராமன் ஆகியோரின் பெயர்கள் இந்தப் பட்டியலில் அடிபட்டது.
இந்நிலையில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் நடித்த நடிகை ஷில்பா மஞ்சுநாத் பிக் பாஸ் சீசன் 4 வீட்டுக்கு அனுப்ப விஜய் தொலைக்காட்சி அணுகியதாகவும், ஆனால் அவர் 100 நாளைக்கு ஒரு கோடி சம்பளமாக கொடுத்தால் தாராளமாக வருவதாகவும் கூறியதாக செய்திகள் கசிந்தது.
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி தற்போது ஷில்பா மஞ்சுநாத் இன் டீலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், அதனால் ஷில்பா மஞ்சுநாத் பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவராக இருப்பார் எனவும் கூறப்படுகிறது.