மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. ஷிவாங்கியா இது! வேற லெவலில் நண்பர்களுடன் போட்ட குத்தாட்டத்தை பார்த்தீங்களா! அசந்துபோன ரசிகர்கள்!!
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது இனிமையான குரலால் ரசிகர்களை கவர்ந்தவர் ஷிவாங்கி. அதனைத் தொடர்ந்து அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் தனது சேட்டையால், கலகலப்பான பேச்சால் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். அவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஷிவானிக்கு ஏராளமான பட வாய்ப்புகளும் குவியத் துவங்கியது. அவர் சிவகார்த்திகேயனுடன் டான், உதயநிதி ஸ்டாலினின் ஆர்ட்டிக்கிள் 15 போன்ற படங்களில் நடிக்கிறார். மேலும் நடிப்பு மட்டுமின்றி ஷிவாங்கி ஆல்பம் பாடல்களையும் பாடி நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் தனது நண்பர்களுடன் ராசாத்தி என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்ட அசத்தலான வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலான நிலையில் அதனைக் கண்ட ரசிகர்கள் ஷிவாங்கியா இது என ஆச்சரியம் அடைந்துள்ளனர். மேலும் அந்த வீடியோவிற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.