மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தடுப்பூசி போட்டு கொண்ட குக் வித் கோமாளி ஷிவாங்கி! அவரோட ரியாக்ஷனை பார்த்தீர்களா!! வைரலாகும் புகைப்படம்!!
தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் இரண்டாவது அலையாக பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனோ பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையால் மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து வருகின்றனர். மேலும் இதனால் படுக்கை தட்டுப்பாடு, ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்றவை ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுபடுத்த மத்திய மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அனைவருக்கும் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரபலங்கள் பலரும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்தப் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில்
கோமாளியாக கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ஷிவாங்கி. அவர் தற்போது கொரோனோ தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தை அவர் இணையத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.