மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வேற லெவல்தான்.. குக் வித் கோமாளி ஷிவாங்கிக்கு அடித்த அடுத்த அதிர்ஷ்டம்! புகைப்படத்தைக் கண்டு குஷியான ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மனதை பெருமளவில் கவர்ந்தவர் ஷிவாங்கி. இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர் பட்டிதொட்டியெல்லாம் பெருமளவில் பிரபலமானார்.
ஷிவாங்கி இதற்கு முன்பு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது பாடல் திறமையால் பிரபலமானவர். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. சிவகார்த்திகேயனின் டான், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகும் ஆர்டிகிள் 15 போன்ற படங்களில் சிவாங்கி நடிக்க உள்ளார்.
இந்த நிலையில் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த காசேதான் கடவுளடா என்ற படத்தை ஆர்.கண்ணன் ரீமேக் செய்கிறார். இப்படத்தில் யோகி பாபு, மிர்ச்சி சிவா ஆகியோர் நடிக்கின்றனர். ப்ரியா ஆனந்த் ஹீரோயினாக நடிக்க உள்ளார். இந்த படத்தில் குக் வித் கோமாளி ஷிவாங்கியும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் அண்மையில் இப்படத்தின் பூஜை விழா நடைபெற்றுள்ளது. அதில் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.