மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாடர்ன் குந்தவையாக மாறிய சிவாங்கி.. வெளியான புகைபடத்தை பார்த்து அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள்.!
விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமாக இருப்பவர் சிவாங்கி. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகராக கலந்து கொண்டு சின்னத்திரையில் அறிமுகமானார். இந்நிகழ்ச்சியில் இவரது பாடலின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.
இதன்பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு கலக்கினார். இந்நிகழ்ச்சியில் புகழ், சிவாங்கி, பாலா ஜோடிகள் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. மேலும் சிவாங்கியின் அண்ணன் தங்கை காமெடியை ரசிக்காதவர்கள் இல்லை என்றே சொல்லலாம்.
மேலும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற சிவாங்கி நடிகையாகவும் பாடகியாகவும் கலக்கி வருகிறார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக களமிறங்கி டைட்டிலை வென்றிருக்கிறார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சிவாங்கி, அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இவ்வாறு சமீபத்தில் சிவாங்கி பதிவிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மார்டன் குந்தவி என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.