மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. சூப்பர்! நம்ம ஷிவாங்கி பிளஸ் 2வில் இவ்வளவு மார்க் வாங்கியிருக்காங்களா.! சர்ப்ரைஸான ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களிடையே வரவேற்பை பெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவாங்கி. பாடகர் குடும்பத்தை சேர்ந்த அவர் தனது மெல்லிய இனிமையான குரலால் அனைவரையும் பெருமளவில் கவர்ந்தார். மேலும் இவரது சிறுபிள்ளைத்தனமும், வெகுளித்தனமும் மக்களால் ரசிக்கபட்டது.
இந்த நிலையில் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து அனைவரது உள்ளத்திலும் நீங்கா இடம்பிடித்தார். மேலும் அவர் வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில் ஷிவாங்கி சில படங்களில் நடித்துள்ளார். அவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்று வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஷிவாங்கி தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகப் போவதாக அறிவித்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவரது முடிவை மாற்றக் கோரி பலரும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்தது. இதைத்தொடர்ந்து லைவில் பேசிய அவரிடம் அதிகமான ரசிகர்கள் நீங்கள் பள்ளியில் படிக்கும்போது எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில் ஷிவாங்கி தான் பிளஸ் 2வில் 1200க்கு 1112 மதிப்பெண்கள் பெற்றதாக கூறியிருக்கிறார். மேலும் காலேஜ்க்கு சென்றபிறகு அடிக்கடி சூட்டிங் வந்து விடுவதால் தான் அரியர் வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.