மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குக் வித் கோமாளி முடிஞ்ச நிலையில் நம்ம ஷிவாங்கி யார் வீட்டிற்கு சென்றுள்ளார் பார்த்தீர்களா! வைரலாகும் கியூட் புகைப்படம்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சி கடந்த வாரத்துடன் முடிவுக்கு வந்தது. இதில் கனி முதலிடத்தையும், ஷகிலா இரண்டாவது இடத்தையும், அஸ்வின் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்தது ரசிகர்கள் மட்டுமின்றி போட்டியாளர்கள், கோமாளிகள் மற்றும் நடுவர்கள் அனைவருக்கும் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. செஃப் தாமு கூட இறுதி நிகழ்ச்சியில் கண்கலங்கினார். இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் ஷிவாங்கி. வெகுளிதனமான பேச்சுடனும், குறும்புடனும் சிறுபிள்ளை போல இருக்கும் அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் ஷிவாங்கி செஃப் தாமு வீட்டிற்கு திடீர் விசிட் அடித்துள்ளார். மேலும் அங்கு அவருடனும், அவரது மகளுடனும் அழகாக புகைப்படமும் எடுத்துள்ளார். அதனை செஃப் தாமுவின் மகள் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது.