ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
"எந்த நாட்டு இளவரசி இவர்" .. ஷிவானி நாராயணனை வருணிக்கும் ரசிகர்கள்
தமிழ் திரையுலகில் சின்னத்திரையிலிருந்து வெள்ளி திரைக்கு சென்ற நடிகைகளின் வரிசையில் சிவானி நாராயணனும் ஒருவர். ஆரம்பத்தில் 'டிக் டாக்' செயலியில் வீடியோ பதிவிட்டு பிரபலமானார்.
இதன்பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட 'பகல் நிலவு' சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார். இதனைதொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற சீரியலில் நடித்திருந்தார்.
இதனையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு மேலும் ரசிகர் கூட்டம் பெருகியது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கமலஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படத்தில் நடித்தார்.
சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி நாராயணன் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவார். சமீபத்தில் இவரின் பிறந்தநாளின் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இளவரசியை போல் அலங்காரம் செய்து கொண்டு போட்டோசூட் செய்து புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். எந்த நாட்டு இளவரசி இவர் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.