மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெளிநாட்டில் ஷிவாங்கி போடும் ஆட்டத்தை பார்த்தீங்களா! அம்மணி செம ஜாலிதான்! வைரலாகும் கியூட் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்களிடையே அறிமுகமானவர் ஷிவாங்கி. இவர் தனது இனிமையான குரலால் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். அதனை தொடர்ந்து ஷிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மிகவும் சுட்டித்தனமாகவும், கலகலப்பாகவும் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார்.
ஷிவாங்கி தற்போது கனடாவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் கச்சேரியில் பாடியுள்ளார். அந்த வீடியோக்கள் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது. மேலும் அங்கு அவர் ஊர் சுற்றியும் வருகிறார்.
இந்நிலையில் தற்போது ஷிவாங்கி கனடாவில் ரயில் மீது ஏறி டான்ஸ் ஆடியுள்ளார். அதாவது அவர் உயிரே படத்தில் தைய தைய பாடலுக்கு நடனமாடியுள்ளார். அந்த வீடியோவை அவர் இணையத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.