மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனது மருமகளுடன் க்யூட்டாக ரீல்ஸ் செய்து அசத்திய நடிகர் விஜய்யின் தாய்.! லைக்ஸ்களை அள்ளும் வீடியோ!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட், மாஸ் திரைப்படங்களில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டு தளபதியாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது தாயார் ஷோபா சந்திரசேகர். இவர் எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர், பின்னணி பாடகி என பன்முகத்தன்மை கொண்டு திகழ்கிறார்.
இந்நிலையில் ஷோபா சந்திரசேகர் தனது கணவருடன் துபாய்க்கு சென்றுள்ளாராம். அங்கு ஷோபா சந்திரசேகரின் சகோதரரும், முன்னாள் பின்னணி பாடகருமான எஸ்.என் சுரேந்திரனின் மகளுமான பல்லவி தனது கணவருடன் செட்டிலாகியுள்ளார். அங்கு குடும்பத்தினருடன் ஷோபா சந்திரசேகர் நேரத்தை செலவிட்டு வருகிறாராம்.
இந்நிலையில் தற்போது ஷோபா சந்திரசேகர் தனது மருமகள் பல்லவியுடன் ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோவை பல்லவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அந்த க்யூட்டான வீடியோ இணையத்தில வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.