மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நான்கு வருட காதல்.! ஸ்ருதி ஹாசனுடன் பிரேக் அப்பா?? என்ன அவரது காதலர் இப்படி சொல்லிட்டாரே!!
தமிழ் சினிமாவில் 2007-ம் ஆண்டு வெளிவந்த ஏழாம் அறிவு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். இவர் உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஆவார். தொடர்ந்து தனுஷ், விஜய், அஜித், சூர்யா, விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் மியூசிக்கில் ஆர்வம் கொண்ட அவர் ஆல்பம் பாடல்களையும் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில்கூட லோகேஷ் கனகராஜுடன் ஸ்ருதிஹாசன் அவரே இசையமைத்து பாடி, நடித்திருந்த "இனிமேல்"ஆல்பம் பாடல் வெளியானது.
ஸ்ருதி ஹாசன் டூடுல் கலைஞரும் ஓவியருமான சாந்தனு ஹசாரிகா என்பவரை கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த நிலையில் திடீரென ஸ்ருதிஹாசன் மற்றும் சாந்தனு இருவரும் சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒருவரையொருவர் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளனர். மேலும் இருவரும் ஒன்றாக எடுத்திருந்த புகைப்படங்களையும் டெலிட் செய்துள்ளனர். இந்த நிலையில் இருவரும் பிரேக்கப் செய்துவிட்டதாக தகவல்கள் பரவி வருகிறது.
இந்நிலையில் இந்த திடீர் பிரேக்கப்பிற்கு காரணம் என்ன? என்று மீடியா ஒன்று சாந்தனு ஹசாரிகாவிடம் கேட்டதற்கு அவர் மன்னித்துவிடுங்கள், இது பற்றி நான் பேச விரும்பவில்லை என்று கூறியுள்ளாராம். மேலும் ஸ்ருதிஹாசனும் இதுகுறித்து எதுவும் பேசவில்லை.