மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலுடன் சேர்ந்து ஸ்ருதிஹாசன் செய்த காரியம்! வச்சு செய்யும் நெட்டிசன்கள்! வைரல் வீடியோ!!
தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் பல உச்ச பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கினார்.
ஸ்ருதிஹாசன் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். அவர் முன்பு லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேலை என்பவரை காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2019 ஆம் ஆண்டு பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது ஸ்ருதி அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த சாந்தனு ஹசாரிகா என்பவருடன் நெருங்கி பழகி வருகிறார்.
மேலும் இருவரும் காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஸ்ருதி அவ்வப்போது காதலருடன் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருவார். அந்த வகையில் அவர் தற்போது தனது காதலருடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்த வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.