மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அப்பா வயது சூப்பர் ஸ்டார் நடிகருடன் ஜோடி சேரும் நடிகை ஸ்ருதிஹாசன்! யாருடன் பார்த்தீங்களா! வெளிவந்த தகவல்!!
தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஸ்ருதி ஹாசன். உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இடையில் சற்று பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில் அவர் வெப்சீரிசில் நடித்தார். மேலும் ஸ்ருதி ஹாசன் வாய்ப்புக்காக வயது மூத்த நடிகர்களுடனும் கமிட்டாகி வருகிறார். ஸ்ருதிஹாசன் கிராக் படத்தில் 54 வயது நிறைந்த ரவி தேஜாவுக்கு ஜோடியாக நடித்தார்.
மேலும் தன் தந்தை வயதுடைய நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணனின் 107 வது படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அதனைத் தொடர்ந்து ஸ்ருதிஹாசன் 66 வயது நிறைந்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் 154வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. மேலும் இதுகுறித்து சிரஞ்சீவியும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Honoured to work with you sir ! Thankyou for the wonderful welcome 🙏🌸 https://t.co/SuCasEmwrS
— shruti haasan (@shrutihaasan) March 8, 2022