மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏன்மா.. இப்படி குறுகுறுனு பாக்குற! மாடர்ன் கிளாமர் லுக்கில் ஸ்ருதி வெளியிட்ட புகைப்படங்களை பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதனைத் தொடர்ந்து அவர் பல உச்ச பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஸ்ருதிஹாசன் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். அவர் முன்பு லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேலை என்பவரை காதலித்து வந்தார். ஆனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2019 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து ஸ்ருதி தற்போது சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார்.
மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது காதலருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது பிளாக் அண்ட் ஒயிட்டில் மாடர்னான கிளாமர் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதனை கண்ட நெட்டிசன்கள் ஏன்மா அப்படி பாக்குற? பயமா இருக்குல்ல.. என கமெண்ட் செய்து வருகின்றனர்.