மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அப்படியொரு வினோதமான கெட்டப்பில் பேயாட்டம் போட்ட நடிகை ஸ்ருதிஹாசன்.! மிரண்டு போன ரசிகர்கள்.! ஷாக் வீடியோ!!
உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்தமகள் ஸ்ருதிஹாசன். பாடகியாக தனது கேரியரை துவங்கிய அவர் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், சூர்யா ஹீரோவாக நடித்து வெளிவந்த ஏழாம் அறிவு படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற அவர் அடுத்தடுத்ததாக 3, பூஜை, வேதாளம், சிங்கம் 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு வாய்ப்புகள் குறைந்த நிலையில், அவர் தெலுங்கு மொழியில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் தற்போது பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் சலார் படத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் ஸ்ருதிஹாசன் ஹாலிவுட் படத்திலும் கமிட் ஆகியுள்ளார்.
நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது தனது காதலர் சாந்தனுடன் லிவ்விங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் மான்ஸ்டர் மிஷின் என்ற பாடலை பாடி அதற்கு முரட்டுத்தனமாக கவர்ச்சியாக ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ வெளியான நிலையில் அது வைரலாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.