மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏன்மா இப்படி கோணுது..! விதவிதமான போஸ்! நடிகை ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவையே கலக்கி வரும் உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன். ஆரம்பத்தில் பின்னணி பாடகியாக திகழ்ந்து வந்த அவர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக களமிறங்கினார். அதனைத் தொடர்ந்து அவர் தனுஷ், விஜய்,அஜித், சூர்யா, விஷால் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்
நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி,தெலுங்கு என பல மொழி படங்களிலும் முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார். தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து வந்த அவர் தற்போது அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். மேலும் அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு தற்போது சினிமா வாய்ப்புகள் பெருமளவில் வருவதில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது வித்தியாசம் வித்தியாசமாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் ஏம்மா வாய் இப்படி கோணுது என கிண்டல் செய்து வருகின்றனர்.