மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எட்டு வருஷமா அந்த விஷயத்திற்கு நான் அடிமையாக இருந்தேன்.! ஆனால்.. நடிகை ஸ்ருதிஹாசன் போட்டுடைத்த ஷாக் உண்மை!!
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். அவர் தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பிரித்திவிராஜ் நடிப்பில் உருவாக்கியுள்ள சலார் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.
அதனைத் தொடர்ந்து நடிகை ஸ்ருதிஹாசன் The Eye என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் அவர் நேர்காணல் ஒன்றில் தான் மதுபழக்கத்திற்கு அடிமையானது குறித்தும், அதிலிருந்து மீண்டு வந்தது குறித்தும் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது, எனது வாழ்நாளில் எட்டு ஆண்டுகள் நான் மதுபழக்கத்திற்கு அடிமையாக இருந்தேன்.பார்ட்டிகளில் என்னால் நிதானமாக இருப்பது ரொம்ப கடினமாக இருந்தது.நண்பர்களுடன் குடிப்பதை நான் விரும்புவேன். ஒருபோதும் போதைப்பொருட்களை பயன்படுத்தியது கிடையாது. அந்த நாட்களில் மது எனது வாழ்க்கையை ஆட்டிப்படைத்தது. பின்னர் அதிலிருந்து மீண்டு விட்டேன். இப்பொழுது நான் அதுகுறித்து வருத்தப்படவில்லை. அது என் வாழ்க்கையின் ஒரு கட்டம். பலரும் இதைக் கடந்து அதிலிருந்து மீண்டு வரந்துள்ளனர் என கூறியுள்ளார்.