மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
30 செகண்டில் லுக்கே மாறி வேற லெவலில் ஆகிட்டாரே! அந்த சீக்ரெட்டை பகிர்ந்து ஸ்ருதிஹாசன் வெளியிட்ட வீடியோ!!
உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இவர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தின் மூலம் பெருமளவில் பிரபலமடைந்த அவர் பின்னர் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பாடல், டான்ஸ், நடிப்பு என கலக்கி வரும் ஸ்ருதிஹாசன் விஜய் சேதுபதியுடன் நடித்த லாபம் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் பல பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் பிரபாஷுடன் இணைந்து சலார் என்ற படத்திலும் நடிக்கவுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் அவர் தற்போது ஊரடங்கால் வீட்டில் முடங்கியிருக்கும் நிலையில் சமைப்பது, பூனைக்குட்டியுடன் விளையாடுவது போன்ற வீடியோக்களை வெளியிடுவார். மேலும் அவர் தனது காதலர் சாந்தனு ஹசரிகாவுடன் இருக்கும் புகைப்படத்தையும் அவ்வபோது வெளியிடுவார். இந்த நிலையில் ஸ்ருதி தற்போது தான் மேக்கப் போடும் ரகசியத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.