திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அதிரடியான லுக்கில் ரசிகர்களை மிரட்டும் ஸ்ருதிஹாசன்.. வைரலாகும் புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வளர்ந்து வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தமிழில் முதன் முதலில் சூர்யா நடிப்பில் வெளியான 'ஏழாம் அறிவு' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு மிகப்பெரும் பெயர் பெற்று தந்தது.
கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் தமிழில் எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் பிரேக் எடுத்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.
மேலும் இவர் நடிகையாகவும் பாடகியாகவும் இருந்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற திரைப்படங்களிலும் நடித்து தனக்கென தனி இடத்தை திரைத்துறையில் நிலைநாட்டியுள்ளார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களிலும் பிசியாக இருந்து வரும் ஸ்ருதிஹாசன், அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இவ்வாறு தற்போது கருப்பு நிற உடையில் மிரட்டலான லுக்கில் ரசிகர்களை அதிர வைக்கும் வகையில் புகைப்படம் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.