#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் என் நிலைமை இப்படி ஆகுமென்று எதிர்பார்க்கல" ஸ்ருதி பெரியசாமியின் வைரல் பேட்டி..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இந்நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை நிரூபித்து வருகின்றனர்.
இந்நிகழ்ச்சி 6 சீசன்களை தாண்டி ஏழாவது சீசனாக தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வவர்களுக்கு சினிமா துறையில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இது போன்ற நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் கலந்து கொண்டவர்தான் ஸ்ருதி பெரியசாமி. மாடலழகியான ஸ்ருதி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குறுகிய காலத்திலேயே வெளியேறி விட்டார்.
தற்போது ஸ்ருதி பெரியசாமி யூடியூப் சேனலில் ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் "பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் எனக்கு அதிக சினிமா வாய்ப்புகள் வருகின்றன. என் வாழ்க்கை மாறிவிட்டது என்று எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அப்படி இருந்தவர்கள் வாய்ப்பிற்காக பல இடங்களுக்கு அலைந்து வருகின்றனர். ஆனால் எனக்கு அந்த நிலைமை இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் தான் இது சாத்தியம்" என்று கூறியிருக்கிறார். மேலும் இவர் தற்போது "வாழ்வு தொடங்கும் இடம் நீதானே" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.