மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்ன இப்படி சொல்லிட்டாரே.! திருமணம் எப்போது? நடிகை ஸ்ருதியின் பதிலை பார்த்தீங்களா!"
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதி ஹாசன். இவர் உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளாவார். இவர் தமிழ், ஹிந்தி,தெலுங்கு என பல மொழி படங்களிலும் முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்நிலையில் ஸ்ருதி அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி அவ்வப்போது தனது காதலருடன் நெருங்கி இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஸ்ருதி ஹாசனிடம் எப்போது இருவரும் திருமணம் செய்துகொள்வீர்கள் கேட்டகப்பட்டுள்ளது.
அதற்கு ஸ்ருதி எனக்கு திருமணத்தின் மீது பயமாக உள்ளது. அதனால்தான் திருமணம் குறித்து யோசிக்கவில்லை. எனது அப்பா, அம்மாவின் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்துவிட்டது. அதனால் நான் திருமணம் செய்து கொள்ள யோசிக்கிறேன் என்று அர்த்தமில்லை. திருமணம் என்ற வார்த்தையில் எனக்கு பெரிய நம்பிக்கை இல்லை. பயம் மட்டுமே இருக்கிறது.
ஆனால் சாந்தனு எனது வாழ்க்கைக்குள் வந்தபிறகு நிறைய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. எங்கள் இருவருக்கும் இடையே நிறைய விஷயங்கள் ஒத்துப்போகிறது. நான் இப்போது ஆசீர்வதிக்கப்பட்டவளாக கருதுகிறேன் என கூறியுள்ளார்.