திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு நிலைமை.. வேதனை அடைந்த ஸ்ருதிஹாசன்.?
கோலிவுட் திரையுலகில் பிரபல நடிகரான கமலஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இவர் சூர்யா கதாநாயகனாக நடித்த 'ஏழாம் அறிவு' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இதன் பிறகு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பல வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்திருக்கிறார். நடிப்பின் மூலமும் அழகின் மூலமும், ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கதாநாயகன்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கும் சம்பளம் வழங்க வேண்டும். தற்போது வரை நயன்தாரா, த்ரிஷா மட்டுமே அதிக சம்பளம் வாங்குவார்கள். ஆனால் அதுவும் கதாநாயகன் அவர்களுக்கு இணையாக இல்லை.
பாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா கதாநாயகன்களுக்கு இணையாக சம்பளம் வாங்குவது பெருமைக்குரிய விஷயமே. இதுவே தமிழ் சினிமாவிலும் வர வேண்டும். ஹீரோயின்களும் தங்களின் உழைப்பை முழுவதுமாக போட்டுதான் நடிக்கிறார்கள். ஏன் இந்த பாரபட்சம் என்று தனது வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார் ஸ்ருதிஹாசன்.