திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அட.. நம்ம ஸ்ருதிஹாசனுக்கு இப்படி ஒரு திறமையா.! பாராட்டி வரும் ரசிகர்கள்.?
நடிகர் கமலஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன், தமிழில் 7ம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் இவர் பாடலாசிரியர், நடிகை, இசையமைப்பாளர் என்று பன்முகத் திறமை கொண்டவராக இருக்கிறார்.
'கே ஜி எப்' என்ற பிரம்மாண்ட வெற்றிப்படத்தை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் , "சலார் பார்ட்-1 சீஸ் பயர்" படத்தில் பிரபாஸ், பிரித்விராஜ், ஜெகபதி பாபு, டினு ஆனந்த், ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி ஆகியோருடன் ஸ்ருதி ஹாசனும் நடித்துள்ளார்.
ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு புவன் கவுடா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 'ஹோம்பாலே பிலிம்ஸ்' படநிறுவனம் சார்பில், விஜய் கிரகந்தூர் மிகப் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரித்துள்ளார்.
இப்படத்திற்காக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று 5 மொழிகளில் தனது சொந்தக் குரலில் பேசி நடித்துள்ளார் ஸ்ருதி ஹாசன். முன்னதாக ஸ்ருதி ஹாசன் நடித்த 'வீரசிம்ம ரெட்டி', 'வால்டர் வீரய்யா' இரண்டு படங்களும் 100கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.