மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விரைவில் டும்டும்தானா.! சூப்பர் ஹிட் பாடலுக்கு ஜோடியாக அசத்தல் ஆட்டம் போட்ட சித்தார்த்- அதிதி ராவ்.! வைரல் வீடியோ!!
தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். தொடர்ந்து அவர் 180, உதயம் என்.எச் 4, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா, காவியத் தலைவன், அருவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் பல தெலுங்கு படங்களிலும் நடித்து முன்னணி நடிகராக உள்ளார்.
இந்த நிலையில் நடிகர் சித்தார்த் தமிழில் காற்று வெளியிடை, செக்க சிவந்தது வானம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை அதிதி ராவ்வை காதலிப்பதாக கடந்த சில காலங்களாகவே செய்திகள் பரவி வருகிறது. மேலும் அதற்கேற்றார் போல் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் தற்போது சித்தார்த் மற்றும் அதிதி இருவரும் விஷால் நடிப்பில் வெளிவந்த எனிமி படத்தில் இடம்பெற்று பட்டிதொட்டியெல்லாம் செம ஹிட்டான மால டம் டம் மஞ்சர டம் டம் பாடலுக்கு அழகிய ஆட்டம் போட்டுள்ளனர். இந்த வீடியோவை அவர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது.