தலைவர் 168 படத்தில் இணையும் பிரபல முன்னணி இளம்நடிகர்! வெளியான உற்சாக தகவல்!



Siddharth going to act in thalaivar 168 movie

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான தர்பார் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிவா இயக்கத்தில் தனது 168 வது படத்தில் நடித்து வருகிறார். 

கிராம பின்னணியில் விவசாய கதையம்சத்தை கொண்டு உருவாகும் இந்த படத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு ஜோடியாக  குஷ்பூ மற்றும் மீனா நடிக்க உள்ளனர். மேலும் அவர்களுடன் கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். 

siddharth

இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் நகரில்  நடைபெற்றது. அதனை தொடர்ந்து படக்குழு இரண்டாவது கட்ட படப்பிடிப்புக்கு  தயாராகும் நிலையில் தலைவர் 168 வது படத்தில் நடிகர் சித்தார்த் முக்கிய கதாபாத்திரத்தில்,  கீர்த்தி சுரேஷ்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை மேலும் நடிகர் சித்தார்த் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.