Good Bad Ugly: அஜித் குமாரின் குட் பேட் அக்லீ படம்; ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
மஞ்சும்மேல் பாய்ஸை நேரில் சந்தித்து பாராட்டிய நடிகர் சிலம்பரசன்; கொண்டாட்டத்தில் படக்குழு.!
22 பிப்ரவரி 2024 அன்று சிதம்பரம் இயக்கத்தில், நடிகர்கள் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ், கணபதி எஸ்.பொதுவால், லால் ஜூனியர் உட்பட பலரும் நடித்திருந்தனர்.
இப்படம் கேரளாவை சேர்ந்த நண்பர்கள் குழு, கமல் ஹாசனின் குணா திரைப்படம் எடுக்கப்பட்ட குகைக்கு சென்று உயிர் பிழைத்த வந்த கதையை அடிப்படையாக கொண்டது. உண்மை சம்பவம் படமாக எடுக்கப்பட்டது.
படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக, கமல் படத்தில் இடம்பெற்ற பாடல் கவனிக்கப்பட்டது. மலையாள மொழியையும் தாண்டி, படம் மொழிமாற்றம் செய்யப்படாமல் பல மாநிலங்கள் மற்றும் நாடுகளில் திரையிடப்பட்டு வரவேற்கப்பட்டது.
இதனால் தற்போது வரை படம் ரூ.200 கோடி அளவில் வசூல் குவித்து இருக்கிறது. இந்நிலையில், நடிகர் சிம்பு மஞ்சும்மேல் திரைப்படத்தை பார்த்து, படக்குழுவை நேரில் சந்தித்து பாராட்டி இருக்கிறார். இது படக்குழுவினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.