ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
உயர் மின்னழுத்த கம்பி மீது கைபட்டு சோகம்; பெயிண்டர் பரிதாப பலி.!
சென்னையில் உள்ள புழல், கன்னடபாளையம், ஜீவா தெருவில் வசித்து வருபவர் ஆனந்தன் (வயது 40). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று பிள்ளையார்கோவில் தெருவில், வீட்டின் வெளியே சுண்ணாம்பு அடித்துக்கொண்டு இருந்தார்.
மின்சாரம் பாய்ந்து சோகம்
அச்சமயம், வீட்டின் உயர் மின்னழுத்த கம்பி, எதிர்பார்த்த விதமாக ஆனந்தனின் கையில் பட்டுள்ளது. அப்போது, மின்சாரம் உடலில் பாய்ந்ததால், அவர் தூக்கி வீசப்பட்டார்.
மரணம் உறுதி
இதனைக்கண்டு அதிர்ந்துபோனவர்கள், உடனடியாக ஆனந்தனை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். அங்கு நடந்த மருத்துவ பரிசோதனையில், ஆனந்தன் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த ஓராண்டில் கணவர் வீட்டில் சடலமாக பெண்.. "பத்துப் பாத்திரம் தேய்த்து மகளை கவனித்தேனே" - தாய் குமுறல்.!
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த புழல் காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 22 வயதில் இளம் ரௌடி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய நபர்கள் யார்? ஆவடியில் பரபரப்பு சம்பவம்.!