திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"சூர்யாவின் மகளாக நடித்த குழந்தையா இது?! என்னமா வளர்ந்துட்டாங்க!" ஆச்சர்யப்படும் ரசிகர்கள்!
2005ம் ஆண்டு "ஜெய் சிரஞ்சீவா" என்ற தெலுங்குப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷ்ரியா ஷர்மா. இவர் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதையும், ஸ்டார் பரிவார் விருதையும் வென்றுள்ளார்,
தற்போது வழக்கறிஞராக பணியாற்றி வரும் ஷ்ரியா ஷர்மா, தமிழில் சூர்யா - ஜோதிகா நடித்த "சில்லுனு ஒரு காதல்" படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்து அனைவர் மனதிலும் இடம் பிடித்திருந்தார். இதை தொடர்ந்து ஷங்கரின் "எந்திரன்" படத்திலும் ஒரு சில காட்சிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஷ்ரியா ஷர்மா, 2015ம் ஆண்டு "கயாகுடு" என்ற தெலுங்குப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கில் பில்லு கேமர், நிர்மலா கான்வென்ட் ஆகிய படங்களில் நடித்துள்ள இவர் தற்சமயம் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்.
மற்ற குழந்தை நட்சதிரங்களைப் போல் ஷ்ரியாவும், தற்போது அழகழகான உடைகளில் ரசிக்கும்படியாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி, அந்தப் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் 'அந்தக் குழந்தையா இது' என்று ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.